2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மலையகத்துக்கு மூன்று தேசிய பாடசாலைகள்

Kogilavani   / 2017 ஏப்ரல் 11 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, மலையகத்தில் மூன்று தேசியப் பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன.

இதற்கமைவாக, கண்டி-மாபேரிதன்ன, நுவரெலியா- நானுஓயா, இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் தேசிய பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன.
மலையத்தை பொருத்தவரையில், மாகாண பாடசாலைகளே அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக தமிழ்மொழி மூலமான தேசிய பாடசாலைகள் கண்டி மாவட்டத்தில் இரண்டும்¸ மாத்தளை மாவட்டத்தில் இரண்டும்¸ பதுளை மாவட்டத்தில் இரண்டுமாக மொத்தமாக ஆறு பாடசாலைகள் மாத்திரமே காணப்படுகின்றன.

இதனை அதிகரிக்கும் முகமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் முன்னெடுக்கபடும் இந்த வேலைதிட்டத்தில், நுவரெலியா மாவட்டத்துக்கான தேசிய பாடசாலை, நானுஓயா எடின்பொரோ தோட்டத்தில் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

களனிவெலி பெருந்தோட்டக் கம்பனி இதற்கான 5 ஏக்கர் காணியை வழங்குவதற்கும் முன்வந்துள்ளது.

இந்த இடத்தை பார்வையிடுவதற்காக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், அமைச்சின் பாடசாலை கட்டட அபிவிருத்தி பிரிவின் பொறியியலாளர்கள், திட்ட வரைஞர்கள், மத்திய மாகாண கட்டட பொறியிலாளர்கள் உட்பட பலர், நேற்று அங்கு விஜயம் மேற்கொண்டனர்.

கண்டி, மாபெரிதென்னையில் அமைய இருக்கும் தேசிய பாடசாலைக்கு, 5 ஏக்கர் காணியும் நுவரெலியா மாவட்டம் நானுஓயாவில் அமையவிருக்கும் தேசிய பாடசாலைக்கு 5 ஏக்கர் காணியும் இரத்தினபுரியில் அமைய இருக்கும் தேசிய பாடசாலைக்கு 4 ஏக்கர் காணியும், பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஓதுக்கப்பட்டள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .