2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்

Freelancer   / 2023 ஜூலை 04 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவான்எலிய பிரதேசத்தில் தொடர்ச்சியான மழையினால் வீடொன்றின் 15 அடி உயரம் கொண்ட பாதுகாப்பு கல்சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு அறைகள் மற்றும் மலசலகூடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X