2026 மே 09, சனிக்கிழமை

மவுசாகலை நீர்த்தேக்கம் உயர்ந்தது

செ.தி.பெருமாள்   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம், இன்னும் 4 அடிக்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தொடர் மழை பெய்யுமானால், அதன் கொள்ளளவை எட்டிவிட வாய்ப்புண்டு என, லக்சபான நீர் மின்நிலைய உயரதிகாரி தெரிவித்தார்.

நேற்று (16) காலை 8 மணி முதல் இன்று (17) காலை 8 மணி வரையான 24 மணிநேரத்தில், 65.5 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிகளவு நீர்வரத்துக்கு சகல காட்டாறுகளும் வெள்ளப்பெருக்கு எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .