Freelancer / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
மஸ்கெலியா - காட்மோர் கிங்கொரோ பிரிவில் உள்ள வீடு ஒன்றின் மீது பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (13) மாலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை, 32 வயது தாய், மற்றும் 65 வயது ஆண் ஒருவருமே காயமடைந்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் டிக்யகோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் பின்பக்கமாக இருந்த மண்மேடு ஒன்றே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




7 minute ago
13 minute ago
14 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
14 minute ago
15 minute ago