R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
மஸ்கெலியா- நல்லதன்னி பிரதான வீதியின் மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் வாழமலை தோட்டத்தில் பாரிய வெடிப்புக்கள் எற்பட்டு தாழிறக்கம் ஏற்பட்டதனை தொடர்ந்து, குறித்த வீதியினை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நல்லதன்னி பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.
வாழைமலை தோட்டத்தில் சுமார் 100 மீற்றர் தூரம் வரை நான்கு அங்குலம் அகலத்திற்கு பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்த மாவட்டச் செயலாளருக்கு அறிவித்ததற்கமைய நுவரெலியா இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்யும் வரை, மஸ்கெலியா - நல்லதன்னி வீதி நேற்று தொடக்கம் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது..
குறித்த வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago