2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மஹிந்தவின் கூட்டத்தை புறக்கணித்தனர் கூட்டு எதிரணியினர்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

கூட்டு எதிரணியினரின் (பொது ஜன) செயற்பாட்டுக் காரியாலயமொன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இரத்தினபுரியில் நேற்று (07) மாலை திறந்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பவித்திரா வன்னியாராய்ச்சி மற்றும் சபரகமுவ மாகாண சபைத் தலைவர் காஞ்சன ஜயரட்ன ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்சன் பெர்ணான்டோ, சபரகமுவ மாகாணசபை உறுப்பினர்களான ரம்மிய குமாரவீரசிங்க, வருன லியனகே மற்றும் அக்கில எல்லாவல ஆகியோர் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

எனினும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, ஜானக்க வக்கும்புர மற்றும் ரஞ்சித் டி சொய்சா உள்ளிட்ட எவருமே கலந்துகொள்ளவில்லை.

இவர்கள் இக்கூட்டத்தைப் புறக்கணித்தானரா என்பது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அங்கலாய்த்ததுடன், மக்களின் பிரசன்னமும் குறைவாக இருந்தமையைக் காண முடிந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .