2025 ஜூலை 05, சனிக்கிழமை

மஹாவலியின் மாசை அகற்றுவதற்கு ப்ரெண்ட் ஸ்ரீ லங்கா முன்வந்துள்ளது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

இலங்கையின் பிரதான நதியான மஹாவலி கங்கையை சுத்தம் செய்ய, 'ப்ரெண்ட் ஸ்ரீ லங்கா' சுற்றாடல் அமைப்பு முன்வந்துள்ளதாக அவ்வமைப்பின்  தலைவர் கே.தல்வத்த தெரிவித்தார்.

கட்டுகஸ்தோட்டை தொடக்கம் பொல்கொல்லை நீர்த்தேக்கம்  வரையான பகுதியை முதலில்; சுத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும்  அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

'மஹாவலி கங்கையை பாதுகாக்கும் நோக்குடன், மஹாவலி திட்ட அபிவிருத்தி அதிகாரிகளுடன் கலந்துரையாடி  திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாகவே, கட்டுகஸ்தோட்டையில் இருந்து பொல்கொல்லை நீர்த்தேக்கம் வரையிலான பகுதியில் மஹாவலி கங்கையின் இரு பக்கங்களையும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

'கங்கையில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன்களை அகற்ற உள்ளோம். இத்திட்டம் எதிர்வரும் காலத்தில் விக்டோரியா நீர்த்;தேக்கம் வரை நீடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.  இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  அனுமதியை பெறவுள்ளோம்' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .