Kogilavani / 2021 மே 18 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஸ், எஸ்.கணேசன்
இராகலை மாகுடுகல, கிளண்டவன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மேற்கொண்டு வந்த போராட்டம், நேற்று (17) நடைபெற்றக் கலந்துரையாடலுன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாகுடுகல, கிளண்டவன் தோட்டங்களின் நிர்வாகத்தை மத்துரட்ட பிளாண்டேசன் பொறுப்பேற்று நடத்திச் செல்வதாக உறுதியளித்ததையடுத்தே, தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேற்படித் தோட்டங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமது வாழ்வாதாரம் பாதிப்படைந்ததைச் சுட்டிக்காட்டியும், தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாகுடுகல தோட்டத்தை, செரண்டிப்பிட்டி பெருந்தோட்ட நிறுவனமே இதுவரை நிர்வகித்து வந்தது.
எனினும் உரிய பராமரிப்பின்றி தேயிலைத் தோட்டங்கள் காடுகளானதால், தொழிலாளர்கள் வேலை இழந்ததுடன் வாழ்வதாரமும் பாதிக்கப்பட்டது. மேற்படி நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டப் போதிலும் அது பலனிக்கவில்லை.
இதனையடுத்து இவ்விடயம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
மேற்படி பிரச்சினைக்குத் தீர்வாக இதுவரை மாகுடுகல, கிண்டவன் தோட்டங்களை நிர்வகித்து வந்த செரண்டிப்பிட்டி நிர்வாகத்திடம் இருந்து அந்தத் தோட்டங்களை மத்துரட பிளாண்டேஷன் பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பிலான கலந்துரையாடல், மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் இராகலையிலுள்ள பொது முகாமையாளர் காரியாலயத்தில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற நிலையில், மத்துரட பிளான்டேஷன் நிர்வாகம் மாகுடுகல, கிளண்டவன் ஆகிய தோட்டங்களை அபிவிருத்திச் செய்து, நடத்திச் செல்வதற்கு இணக்கம் தெரிவித்ததாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிப் பொதுசெயலாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
செரண்டிப்பிட்டிய நிர்வாகத்திடமிருந்து மத்துரட்ட பெருந்தோட்ட கம்பனி இவ்விரு தோட்டங்களையும் பொறுப்பேற்றதுடன் சுமார் 600 இலட்சம் ரூபாய் செலவில் புற்களை ஒழித்து தொழிலாளர்களுக்கு தொழில் வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 25ஆம் திகதி தொழிலாளர்களுக்கு, மாதாந்த முற்பணமாக தலா ஆயிரம் ரூபாயை வழங்கவும் மேற்படி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
குறித்த இரண்டு தோட்டங்களிலும் சுமார் 260 ஹெக்டெயர் தேயிலை நிலங்களை முறையாகப் பராமரிப்பதற்கு தொழிலாளர்கள் பாரிய ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என மத்துரட்ட நிறுவனம் தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் மாகுடுகல தோட்டத் தொழிலாளர்களுக்கு அனைத்துச் சலுகைகளையும் உரிமைகளையும் வழங்க மத்துரட பிளான்டேஷன் நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தொழிலாளர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டதுடன் இன்று(19) பணிக்குத் திரும்பவுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், இ.தொ.காவின் உபசெயலாளர் பாரத் அருள்சாமி உள்ளிட்ட இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.



7 minute ago
27 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
27 minute ago
46 minute ago
1 hours ago