Editorial / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
நுவரெலியா – ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு, வருகை தரும் சுற்றுலா பயணிகள், தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுகளை பூங்காவிலும், வீதியோரம் மற்றும் வனப்பகுதிகளிலும் வீசிவிட்டு செல்வதனால், அப்பகுதி சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அருகாமையில் குப்பைத் தொட்டியொன்று வைக்கப்பட்டிருந்தாலும், அதனுள் குப்பைகளை போடாமல், வெளியிடங்களில் வீசியெறிந்துவிட்டு செல்வதால், பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஹக்கல பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், குப்பைகளை வீதியோரங்களில் வீசிச் செல்லாமல், அவ்விடங்களில் வைக்கப்பட்ட குப்பைத்தொட்டிகளில், குப்பைகளை போட்டுச் சென்றால், சூழலை பாதுகாக்க முடியும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
4 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago