2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மாடியிலிருந்து தவறி விழுந்து சுற்றுலாப் பயணி மரணம்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா, ராமு தனராஜா      

பதுளை-  எல்ல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்து ,வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செக் குடியரசைச் சேர்ந்த குறித்த நபர், தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

28 வயதான இந்நபர் நேற்று  (19) இரவு விடுதியின் இரண்டாம் மாடியில் தன்னுடன் தங்கியிருந்த இரண்டு நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருந்த போதே, பாதுகாப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு கீழே  விழுந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X