2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மாணவனை தேடி வலைவீச்சு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை, தர்மபால மாவத்தையிலுள்ள  அலைபேசி பழுதுபார்க்கும் நிலையத்தின்  கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு பலவந்தமாக உள்நுழைய முற்பட்ட மாணவனை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், மாத்தளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த மாணவன், மேற்படி நிலையத்துக்கு அருகிலுள்ள பிரபல பாடசாலையில்,  தரம் 8இல் கல்வி பயின்று வருவதாக  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வழமைப்போன்று பாடசாலைக்கு செல்வதற்காக இன்றுக்  காலை வீட்டிலிருந்து வந்த மாணவன்,  மேற்படி  நிலையத்துக்கு அருகில் வந்துள்ளதுடன் அருகிலிருந்த பாரிய கல்லொன்றை எடுத்து, நிலையத்தின் கண்ணாடியை உடைத்துள்ளதுடன் துவாரத்தின் வழியே வியாபார நிலையத்துக்கு செல்ல முற்பட்டுள்ளார். 

அருகிலிருந்தவர்கள் குறித்த மாணவனை மடக்கிப்பிடிக்க முற்பட்டபோதிலும் அம்மாணவன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .