Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
எம்பிலிபிட்டிய கல்வி வலயத்திலுள்ள ஜனாதிபதி வித்தியாலயத்தில், தரம் ஒன்றுக்கு தமது பிள்ளைகளைச் சில பெற்றோர் பலாத்காரமாக அமர வைத்த சம்பவம், நேற்று (10) இடம்பெற்றுள்ளது.
இந்த பலவந்த நடவடிக்கை காரணமாக, பாடசாலையில் அமைதியற்ற சூழல் நிலவியதாகவும் இதன் பின்னர், இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்து, வகுப்பறையில் அமர வைத்த மாணவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமது பிள்ளைகளை, இந்தப் பாடசாலையில் சேர்ப்பதற்காக, கடந்த சில மாதங்களாக முயன்று வருவதாகவும் எனினும், பாடசாலையில் அனுமதி கிடைக்கவில்லை என்றும் பெற்றோர் தெரிவித்தனர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு உண்மையில்லை என்றும் தாங்கள் நேர்மையமான முறையிலேயே மாணவர் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வகுப்புகளில் இருந்து வெளியேற்றிய மாணவர்களின் பெற்றோரை, கல்வி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதற்கு முயன்றபோதும், அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.
எது எவ்வாறாயினும், இதே பாடசாலையில் தங்களது பிள்ளைகளைச் சேர்ப்பிப்பதற்கு, வேறு முறையில் தாங்கள் போராடவுள்ளதாக, பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago