2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மாணவர்களை பாடசாலைக்கு அழைத்த அதிபருக்கு எச்சரிக்கை

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன்- கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலையொன்றின் அதிபரால், குறித்த பாடசாலையில்  கல்வி கற்கும் உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்கள்  நேற்றைய தினம்(25) பாடசாலைக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் நாடு முழுவதிலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு மாத்திரமே கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த பாடசாலையின் அதிபர் சாதாரணதரத்தில் கற்கும் 40 மாணவர்களையும் உயர்தரத்தில் கற்கும் 15 மாணவர்களையும் பாடசாலைக்கு அழைத்து கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த நிலையில், 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, ஹட்டன் பொலிஸார் சம்பந்தப்பட்ட பாடசாலைக்குச் சென்று, அதிபரை எச்சரித்ததுடன், மாணவர்களையும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் தொடர்புகொண்டு வினவியபோது, பாடசாலை மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை குறித்து, மாணவர்களைத் தெளிவுப்படுத்துவதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டனர் என்றார்.

அத்துடன், அவ்வாறு வருகைத் தந்த மாணவர்களுக்கு எவ்விதமான கற்பித்தல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X