Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 நவம்பர் 14 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பாடசாலையில் திடீர் சுகயீனமடைந்த நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பொகவந்தலாவை பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவை பகுதியிலுள்ள பெருந்தோட்டப் பாடசாலையொன்றில் 3ஆம் தரத்தில் கல்வி கற்கும் 4 மாணவர்களுக்கு மயக்கம், வாந்தி என்பன ஏற்பட்டதையடுத்து பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் குறித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை கொண்ட பின்னரே குறித்த நால்வரும் சுகயீனமடைந்ததாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் நால்வரும் நலமாக இருப்பதாகவும் இவர்கள் திடீர் சுகயீனமடைந்தமை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025