2025 மே 05, திங்கட்கிழமை

மாணவிகள் மூவர் துஷ்பிரயோகம்: விஞ்ஞான ஆசிரியர் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 21 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளபாடசாலை ஒன்றில் தரம் 9ல் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூடத்தில் வைத்து விஞ்ஞான ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

கிதுல்லே பல்லே தோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார். அவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியரின் மனைவியும் ஆசிரியை என்பது தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியர், மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் மூலம்ஏனைய இரு மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக வழி சமைத்து கொடுத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஆசிரியர் மாணவி ஒருவரிடம் வாட்ஸ்அப் மூலம் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வற்புறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் இன்று (21) ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பாடசாலை மாணவிகள் மூவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக ரிக்கிலகஸ்கட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X