2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாணிக்கக்கல் அகழ்ந்த பிரதேசசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பொகவந்தலாவை- மஹாஎலிய வனப்பகுதியில்  சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல்  அகழ்ந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, நோர்வூட் பிரதேசசபை  உறுப்பினரும் அரசியல் கட்சியொன்றின் இளைஞர் அணியின் தலைவர்   உள்ளிட்ட  நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (27) அதிகாலை   இவர்கள் கைதுசெய்யப்பட்டு, நேற்று மாலை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களை அடுத்த மாதம் ஆறாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மஹாஎலிய  வனப்பகுதியில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, வன ஜீவராசிகள்  அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சந்தேகநபர்களை கைதுசெய்யும் போது, குறித்த வனப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில்  ஈடுபட்டிருந்த மற்றுமொரு குழுவினர் அங்கிருந்து   தப்பிச் சென்றுள்ளதாகவும், தப்பியோடியவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை, கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேருக்கும் பிணை வழங்க வேண்டாம் என வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மாவட்ட நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X