2026 மே 14, வியாழக்கிழமை

dd

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 20 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

 

பொகவந்தலாவ - லொய்னோன் தோட்டம், காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் கெசல்கமுவ ஓயாவில்,  சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களை, பொகவந்தலாவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (20) இரவு 09 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொதவந்தலாவ பொலிஸாருக்குக் கிடைக்கபெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யபட்டுள்ளதோடு, மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யபட்ட நான்கு சந்தேக நபர்களும் பொகவந்தலாவ- லொய்னோன் தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மேற்படி நால்வரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .