Janu / 2025 ஜனவரி 05 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்ஜித் ராஜபக்ஷ
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் இரண்டாவது மாடியில் உள்ள விழா மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் காரணமாக மண்டபத்தில் இருந்த பிளாஸ்டிக் கதிரைகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

மேலும் தீ பரவாமல் தடுக்க ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
தீயினால் ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்பட வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விழா மண்டபத்திற்கான மின்சாரத்தை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தீ பரவலால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

6 minute ago
11 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
34 minute ago
1 hours ago