2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மாத்தளையில் தொற்றாளர்கள் உயர்வு

Kogilavani   / 2021 ஜனவரி 15 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறுமுகம் சுதா

எண்ணிக்கை 307 ஆக உயர்வடைந்துள்ளதுடன் நால்வர் மரணித்துள்ளனர் என்று, மாத்தளை விசேட கொரோனா தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர். 

கடந்த 24 மணித்தியாலங்களில் 23 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் மேற்படிப் பிரிவு அறிவித்துள்ளது. 

இதற்கமைவாக  உக்குவளைப் பிரிவில் 95 பேரும் கலேவெல – 48, மாத்தளை நகரசபை பிரதேசம் 47, இறத்தோட்டை – 26, யட்டவத்த – 20, மாத்தளை நகர் - 13, தம்புள்ள மாநகரசபை பகுதி – 13, பல்லேபொல – 08, வில்கமுவ – 05, அம்பன்கங்க– 11, தம்புள்ள – 12, நாவுல – 09 பேர் என 307 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, மேற்படி பிரிவு அறிவித்துள்ளது. 

மேலும் மாத்தளை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால் மக்கள் சுகாதார விதிமுறைகளை கடைபிடித்து அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X