Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி
மாத்தளையிலிருந்து கொழும்புக்கு, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையினூடாகப் பயணிக்கும் அதிசொகுசு பஸ்சேவையை, இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார, இன்று (24) ஆரம்பித்து வைத்தார்.
மாத்தளை மாவட்ட மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, இந்தப் பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தளையிலிருந்து அதிகாலை 4.00 மணிக்குப் பயணத்தை ஆரம்பிக்கும் பஸ், பலாபத்வல, கொலஹேன்வத்தைக்கூடாக யட்டவத்த நகருக்கு வருவதுடன், யட்டவத்த நகரிலிருந்து 4.30 மணிக்கு கொழும்பை நோக்கிப் புறப்படவுள்ளது.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையினூடாக கொழும்பை வந்தடையவுள்ளதாக மாத்தளை பஸ் டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago