Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
6. ரவீந்திரவிராஜ் அபேசிறி
மாத்தளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையான ரயில் சேவையைப் பெற்றுக்கொடுக்குமாறு, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதியிலிருந்து ரயில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ.கமகே தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட புதிய அபிவிருத்தி குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த லக்ஷ்மன் பெரேரா தனது கடமைகளை ஆரம்பித்து, மாவட்ட குழுவின் விசேட அதிதியாக வருகைத் தந்தபோது, மாத்தளை ரயில் நிலையதிபரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் ரயில் சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்கவிடம் முன்னெடுத்த கலந்துரையாடலையடுத்தே, இந்த விடயத்துக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மாத்தளையிலிருந்து கொழும்பு வரையான ரயில் சேவை அவ்வப்போது நடைபெற்று வந்ததுடன், குறித்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் மாத்தளையிலிருந்து கண்டி வரை பயணித்து, கண்டியிலிருந்து வேறொரு ரயில் மூலமே கொழும்பை வந்தடைவர். இதனால் பயணிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதால் ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து மாத்தளையிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago