2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மாத்தளை மாநகரின் புதிய முதல்வருக்கு இராதா எம்.பி வாழ்த்து

Kogilavani   / 2021 ஜனவரி 08 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

தெரிவு செய்யப்பட்டுள்ளமை மாத்தளை வாழ் மக்களுக்குக் கிடைத்த அறிய சந்தர்ப்பமாகும் என்று, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்;ணன் தெரிவித்துள்ளார். 

எனவே புதிய முதல்வாரன சந்தனம் பிரகாஷ், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என்றும் அவருக்கு மலையக மக்கள் முன்னணியின் சார்பாக  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த இராதாகிருஷ்ணன் எம்.பி,   

'இலங்கையில் வடக்கு, கிழக்குக்கு வெளியில் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசமாக மலையகம் காணப்படுகிறது. ஆனால் மாத்தளையைப் பொறுத்த அளவில் ஒரு தமிழர் நகர முதல்வராக வருவது என்பது மிகவும் கடினமான விடயமாகும். எங்களுடைய மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்களேயானால் அந்தப் பதவியை தமிழர்களும் அலங்கரிக்க முடியும்' என்றார்.  

'இதே நிலைமையே, நுவரெலியா மாநகர சபையிலும் இருக்கின்றது. நுவரெலியா மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், அதிகமான தமிழர்கள் வாழ்ந்தாலும் நீண்ட காலமாக இங்கு தமிழர் ஒருவர் நகர முதல்வராக வர முடியாத நிலைமை இருக்கின்றது.

'எனவே இவ்வாறான ஒரு நிலையில், சந்தனம் பிரகாஷ், மாத்தளை மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டிருப்பது, தமிழர்கள் அனைவருக்குமே பெருமைக்குரிய விடயமாகும். அவர், இந்தப் பதவியை சரியான முறையில் பயன்படுத்தி அனைத்துத் தரப்பினரையும் சமமாக கருதி அவர்களுக்குச் சேவை செய்தால், அடுத்து வருகின்ற தேர்தலிலும் அதிக வாக்குகளைப் பெற்று, மீண்டும் நகர முதல்வராக தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X