Editorial / 2020 மே 13 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
சாமிமலை மனோலி தோட்ட நிர்வாகம், அந்தத் தோட்டத் தொழிலாள்களுக்கு, வேலைநாள்களை வழங்குவதிலும், நாள் சம்பளத்திலும் தொடர்ந்து முறையற்ற விதத்தில் நடந்துகொள்வதாக, தோட்டத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 24ஆம் திகதியில் இருந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டும், தமக்குரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில், தற்போது வேலைக்குத் திரும்பியிருந்தாலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டக் காரணத்தால், தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றைய தோட்டங்களில், 16 கிலோகிராம் தேயிலை பறிக்கப்பட்டால், அன்றை தினத்துக்க நாள் சம்பளத்துக்கான பேர் வழங்கப்படும் என்றும் ஆனால், தங்களுக்கு அப்படியும் வழங்கப்படுவதில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவருக்க, 300 – 500 தேயிலை மரங்களை வழங்கி, அதில் தேயிலையைப் பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்துவதாகவும் இது தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், எந்தவொரு தொழிற்சங்கத் தலைவர்களோ, பிரதிநிதிகளோ, தங்களது பிரச்சினை தொடர்பாக விசாரிப்பதற்கு வருகை தரவில்லை என்றும் குறைந்தது, நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கக்கூட யாரும் முன்வரவில்லை என்றும் கூறினார்.
எனவே,நிர்வாகத்தால் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து, தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, அரசியல்வாதிகள் முன்வரவேண்டும் என, மானோலி தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago