Editorial / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகல பிள்ளைகளும் வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது, காணாமற் போன 12 வயதான சிறுமி நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டார் கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியைக் காணவில்லை என, கம்பளை மற்றும் கலஹா பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
கம்பளை நில்ஓய காரியாலய சந்திப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சிறுமியே காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சின்ன அம்மாவின் வீட்டுக்குச் சென்றிருந்த போதே, இவ்வாறு காணாமற் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் தந்தை கண்டி பொதுச் சந்தையில் கடமையாற்றுகின்றார், தாய், தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்குச் சென்றிருந்துள்ளார்.
அதனால், அவர்களின் பிள்ளைகள் மூவரும், சின்ன அம்மாவின் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
சின்ன அம்மாவின் பிள்ளைகள் இருவரும், இந்த சிறுவர்கள் மூவரும், இணைந்து விளையாடி கொண்டிருந்துள்ளனர். அவ்வாறு விளையாடி கொண்டிருந்த பிள்ளைகளிடம், பாடம் கற்கவேண்டுமென சின்ன அம்மா எச்சரித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், கடந்த 7 ஆம் திகதி இரவு, தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த போதே, பிள்ளை காணாமல் போனமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, சிறுமியை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கிராமத்தவர்கள் அனைவரும் இணைந்து அருகிலிருக்கும் வீடுகள் மற்றும் பிரதேசங்கள், பற்றைக்காடுகளில் தேடியுள்ளனர். சிறுமி தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்காமையால், சின்ன அம்மா, சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைந்து செயற்பட்ட பொலிஸார், பொலிஸ் நாயின் உதவியுடன் சிறுமியை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதற்கமைய, நேற்று இரவு நீர்கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நாய், கிராமத்திலிருந்து பிரதான வீதி வரையிலும் வந்து, நின்றுக்கொண்டது. இதனால், பொலிஸார் தமது விசாரணைகளை திசை திருப்பிய போது, வீட்டில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக ஓட்டோவொன்றில் கம்பளைக்குச் சென்று அங்கிருந்து பல இடங்களுக்குச் சென்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
4 minute ago
10 minute ago
11 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
11 minute ago
12 minute ago