Editorial / 2024 செப்டெம்பர் 06 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
நுவரெலியா, நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் வசிக்கும் நான்கு பாடசாலை மாணவர்கள் கடந்த 04 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 15 வயதுடைய நான்கு பாடசாலை மாணவர்களே இவ்வாறு காணாமல் போயிருந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் நால்வரும் கடந்த 04 ஆம் திகதி புதன்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளனர்.
காணாமல் போன மாணவர்களின் பெற்றோர்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.இதையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காணாமல் போன மாணவர்கள் நால்வரும் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் நால்வரும் வேலை வாய்ப்பு தேடி ராகம பிரதேசத்திற்குச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து, மாணவர்கள் நால்வரும் ராகம பொலிஸாரின் தலைமையில் அவர்களது பெற்றோர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
4 minute ago
12 minute ago
15 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
15 minute ago
17 minute ago