2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மிகுதிப் பணத்தைக் கேட்டால் பயணிகளுடன் முரண்படும் நடத்துனர்கள்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன் 


மலையகப் பகுதிகளில் பொது போக்குவரத்து சேவைகளில், பயணிகளுக்கு மிகுதி பணம் வழங்குவதும் தனியார் பஸ்களில்; பஸ் டிக்கட் வழங்குவதும் தற்போது குறைவடைந்துள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பும் அதனை தொடர்ந்து பஸ் உரிமையாளர்களின் பஸ் கட்டண அதிகரிப்பு கோரிக்கை முன்வைப்புக்கு ஏற்ப, பஸ் கட்டணங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் அதிகரிக்கப்பட்டன.

 இவ்வாறான நிலையில், ஒரு சில நடத்துனர்கள் மீதி பணத்தை வழங்கினாலும் பெரும்பாலான நடத்துனர்கள் மிகுதி பணம் வழங்குவதில் அசட்டையாகவே செயற்படுவதாக கவலைத் தெரிவிக்கின்றனர்.

ஒரு சில இடங்களில் பயணிகளால் மிகுதி பணத்தைக் கேட்டாலும் அவை முரண்பாட்டில் முடிவடைவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X