Kogilavani / 2017 நவம்பர் 15 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி அணிவத்தை பிரதேசத்தில், மின் இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி, கல் உடைப்பதில் ஈடுபட்டிருந்த 22 வயது இளைஞர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளாரென, கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி, ஹந்தெஸ்ஸயை சேர்ந்த சுசந்தகுமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், கடுங்காயங்களுக்கு உள்ளான மேற்படி இளைஞனை, கண்டி வைத்திசாலையில் அனுமதித்தப் போதிலும் அங்கு அவர் சிகிசிசை பலனின்றி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026