R.Tharaniya / 2025 மே 04 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா ப்ரௌவுன்சிவீக் தோட்ட புளூம்பீல்டு பிரிவில் சனிக்கிழமை (03) அன்று மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பால் சேகரிப்பு வாகனம் ஒன்று பால் சேகரிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மின்னல் தாக்கத்தால் மரக்கிளை முறிந்து விழுந்தததினால் வாகனத்தின் முன் கண்ணாடி முற்றாக உடைந்த போயுள்ளது.
குறித்த வாகனம், பால் சேகரிப்பதற்காக வரவில்லை. ஆகையால், ஞாயிற்றுக்கிழமை (05) காலை கறந்த பாலில் பெரும் பகுதி, வீணாகிவிட்டதாக பாற்பண்ணையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
இடி, மின்னல் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் மின் உபகரணங்கள் பல சேதமடைந்து உள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
செ.தி.பெருமாள்



2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago