Mayu / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனடிபாத மலைக்கு வழங்கும் மின் இணைப்பு அம்பலம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 25 KVA மின் மாற்றிக்கு பதிலாக இரண்டு 160 KVA மின்மாற்றிகள் பொருத்த படவுள்ளதாக மத்திய மாகாண மின் நிர்மாணப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
ஊசி மலை பகுதியில் நிறுவப்பட்டுள்ள இரண்டு KDA 25 மின் மாற்றிகளில் உள்ளது என மின் சார சபையின் பொறியாளர் தம்மிக்க பண்டார தெரிவித்தார்.

இந்த புதிய அதி சக்தி வாய்ந்த மின்மாற்றி அமைப்பின் ஊடாக 50 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியான மற்றும் தரமான மின்சாரத்தை வழங்கும் திறனை சிவனடி பாத மலைக்கு பெற்று கொடுத்துள்ளதாகவும் தெரிவிப்பட்டுள்ளது.
"தர்ம சுகந்தய மனுசத் அறக்கட்டளை"யின் பியதிஸ்ஸ விக்கிரமரத்ன உள்ளிட்ட குழுவினர் தற்போது பணிய நீர் குழாய் அமைப்பில் குழாய்களை பதித்து, மின்சார நீரேற்று நிலையங்களை அமைத்து நீர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு (2023/2024) சிவனடி பாத மலை பருவகாலம் உந்துவப் புன் பௌர்ணமி நாளில் (26) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதனைத்தொடர்ந்து, யாத்திரை காலம் ஆரம்பிக்கும் முன் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், தர்ம சுகந்தயா மனுசத் அறக்கட்டளை குறித்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நல்லதண்ணியா - சிவனடி பாத மலை வீதியின் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு மஸ்கெலியா மின்சார சபையின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் மின்சார அத்தியட்சகர் மற்றும் ஊழியர்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
தி. பெருமாள்



59 minute ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025