Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 04 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மே மாதம் முதல் இருந்தே மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளது. இதனால், மீன்களை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என மீன் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஹட்டனில், தலபத். கொப்பரா ஆகிய மீன்களின் ஒரு கிலோ கிராமுக்கான சில்லறை விலை, 3,200 ரூபாய் முலை 3,400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. தோரா 3,800 ரூபாய், கெலவல்லா 2,900 ரூபாய், பலயா 1,800 ரூபாய், பரவு 2,000 முதல் 2,200 ரூபாய் வரை. லின்னா 1,300 ரூபாய், சாலையோ 900 ரூபாய், பியா மெஸ்ஸன் 900 ரூபாய் உருலோ 1,700 ரூபாய், நெத்தலி மீன் 700 ரூபாய், இறால் 2,400 ரூபாய். ஆகிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றது,
தற்போதைய மோசமான வானிலை மற்றும் பருவமழை காரணமாக கடல் கொந்தளிப்பாக இருப்பதாகவும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்வதில்லை என்றும், இதன் விளைவாக தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மீன்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மீன் விலை உயர்வு இன்னும் பல நாட்களுக்கு தொடரும் என்றும், இதற்கு இணையாக குளத்து மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
50 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago