2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மீரியாபெத்த நினைவு நாள்

Kogilavani   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீரியாபெத்த  நினைவு நாள்

கு.புஸ்பராஜா

மீரியாபெத்த நினைவு தினத்தை, மலையக மக்களின் பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று, பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொஸ்லாந்தை மீரியாபெத்த மண்சரிவில் உயிரிழந்த உறவுகளுக்கான மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி தினம், இன்று  காலை மீரியபெத்தயில்  அனுஷ்டிக்கப்பட்டது.  இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,

“மண்சரிவு அனர்த்தத்துக்கு உள்ளாகும் நிலையில்,  பெரும்பாலான தோட்டங்கள் உள்ளன.    பெருந்தோட்டங்களில் சூழல் பாதுகாப்பு தொடர்பான தெளிவான கொள்கையும் வேலைத்திட்டமும் இல்லாமையினாலேயே, இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு,   ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியை “மலையக மக்கள் பாதுகாப்பு” தினமாக பிரகடனப்டுத்தி,  இந்த கருத்துகளை வலியுறுத்தும் தினமாக அனுஷ்ட்டிக்க வேண்டும்.

“மேலும், மீரியாபெத்தை அனர்த்தத்தை அர்த்தமுள்ள முறையில் அனுட்டிக்கும் வகையில், இது தொடர்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள்,  அனுட்டான நிகழ்வுகளை வெறும் மத சடங்குகளுக்குள் வரையரைப்படுத்தி விடாமல் பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை, வீட்டுரிமை   காணி வீடுகளுக்கான உறுதிப்பத்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டியதன் அவசியம் என்பன குறித்து, மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வதற்கு, பயன்படுத்துவது அவசியமாகும்” என்றும் அவர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .