Janu / 2025 ஜனவரி 01 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை கிளாஸ்கோ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது முகாமையாளர் விடுதி தோட்டத்தில் சுமார் 2 அடி உயரம் வரை வளர்ந்திருந்த 11 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் தோட்ட துணை அதிகாரி சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளையும் வியாழக்கிழமை (02) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
டி.சந்ரு, செ.திவாகரன்

2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago