Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Janu / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா - நோர்டன் பிரிட்ஜ் பிரதான வீதி ஹபுகஸ்தென்ன பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி சாய்வில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று புதன்கிழமை (09) பதிவாகியுள்ளது.
குறிப்பிட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறு குழந்தை உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக திக் ஓயா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் மீகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், நோர்டன் பிரிட்ஜ் டெபர்டன் மாரதன்ன பிரதேசத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கொன்றுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு நோர்டன்பிரிட்ஜ் டெபர்ட்டனுக்கு சென்ற போது முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகியதால் விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
33 minute ago