Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 10 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
கொழும்பு மற்றும் நாடாளவிய ரீதியில் நடைபெறும் கோட்ட கோ ஹோம் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மலையகத்தில் நேற்று (9) முடங்கிய பொது போக்குவரத்து சேவைகள், இன்று (10) வழமைக்கு திரும்பியுள்ளன.
ஹட்டன் பகுதியிலிருந்து நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்களோ தனியார் பஸ்களோ சேவையில் ஈடுபடவில்லை.
எனினும் இன்றைய தினம் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை, ஹட்டனிலிருந்து தூர பிரதேசங்களும் மிகவும் குறைந்த அளவு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையால் பயணிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மலையகப்பகுதில் மூடப்பட்ட கடைகள் இன்று வழமைப்போல் திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையும் காணக்கூடியதாக இருந்தன.
.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .