Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 08 , மு.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் நகரில் நிர்ணய விலைக்கு மேல், முட்டைகளை விற்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் வர்த்தகர்கள் மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டபோதே, இந்த வர்த்தகர்கள் மூவரும் கூடுதலான விலைக்கு முட்டைகளை விற்றமை கண்டறியப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவை அதிகாரசபை காரியாலயத்தின் பொறுப்பதிகாரி அமில ரத்னாயக்க தெரிவித்தார்.
நுகர்வோரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, இந்த திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நேற்று (07) மேற்கொள்ளப்பட்டது. வெள்ளை முட்டை ஒன்று 44 ரூபாய்க்கும், சிவப்பு நிற முட்டை ஒன்று 46 ரூபாய்க்கும் விற்பனைச் செய்வதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனினும், மேற்படி மூன்று வர்த்தக நிலையங்களிலும் இவ்விரு வகையான முட்டைகளும் 52 ரூபாய் முதல் 56 ரூபாய் வரையிலும் விற்பனைச் செய்யப்படுகின்றது.
அந்த மூவருக்கு எதிராகவும் இம்மாதம் 10ஆம் திகதியன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago