2025 மே 14, புதன்கிழமை

முட்டைக்கு தட்டுப்பாடு

Freelancer   / 2023 மார்ச் 26 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கோழி முட்டைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் தாங்கள் பல்​வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் நுகர்வோர் தெரிவித்தனர்.

கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் ஒரு முட்டையைக் கூட கொள்வனவு செய்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

கடந்த ஒருவார காலமாக, தேவையான முட்டை கிடைக்காமையால் இவ்வாறான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என ஹட்டன் நகரிலுள்ள ஒரு சில முட்டை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X