2025 மே 19, திங்கட்கிழமை

முட்டை பெட்டிக்குள் 2 ரவைகள்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கடுகன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிமத்தலாவ பிரதேசத்தில் முட்டை விற்பனை செய்யும் சிறிய கடையொன்றில் முட்டைப் பெட்டியில் இரண்டு T-56 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடையின் உரிமையாளர் நேற்று (14) பிற்பகல் இந்த இரண்டு துப்பாக்கி ரவைகள் இருப்பதை அவதானித்து,  கடுகன்னாவ பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார், அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

கடைக்கு முட்டை விநியோகம் செய்பவர் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X