Editorial / 2020 மே 04 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
“பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்பதற்காக அடியும் தெரியாமல் முடியும் தெரியாமல் மக்களை பற்றி நினைத்து பேசுவது கேலிக்கூத்து” நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.
முத்தையா பிரபாகரன் தொழிற்சங்கங்கள் பற்றியும் சந்தாப்பணம் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அக்கருத்துகளுக்கு பதில் கொடுக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது,
முத்தையா பிரபாகரன், மழையில் முளைத்த காளான் போல தேர்தலுக்காக முளைத்துள்ளார் என்றும் இதுவரையில் மக்களை பற்றி சிந்திக்காமல், தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை பற்றி பேசி, மக்களை கவர்ந்துவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், முதலில் அரசியலையும் தொழிற்சங்கங்களை பற்றியும் படித்துவிட்டே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, முத்தையா பிரபாகரனின் தொழிற்சாலையில் இருந்து, தொன் கணக்கில் கழிவுகள் வெளியேற்றப்படுவதாகவும் அந்தக் கழிவுகளால் சூழல் மாசடைகிறது என்றும் கூறிய அவர், முதலில் இவற்றுக்குத் தீர்வு கண்ட பின்னர், தொழிற்சங்கங்கள் பற்றி பேசுமாறும் அவர் கூறினார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago