2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முறிந்த வாகையால் போக்குவரத்து பாதிப்பு

Editorial   / 2023 ஜூலை 04 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷன், கௌசல்யா

சீரற்ற காலநிலையால் தொடர்ந்து  பெய்துவரும் அடை மழை காரணமாக பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை நாகசேனை நகரத்தில் இருந்து ஹோல்புறூக் நகரத்துக்கு செல்லும் வீதியில் டிலிகுற்றி தோட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (04) மாலை 3 மணியளவில் வீசிய பலத்த காற்றின் காரணமாக வாகை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அப்பகுதிக்கான போக்குவரத்து.முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாகசேனை, பசுமலை, மன்றாசி மற்றும் டயகம உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் போக்குவரத்து சேவையே பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.  இப்பகுதியில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X