2026 மே 09, சனிக்கிழமை

முற்கொடுப்பனவு வழங்குவதில் தாமதம்: நாளை பாரிய போராட்டம்

செ.தி.பெருமாள்   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரபத்தனை பெருந்தோட்டயாக்கத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் 450 பேருக்கு, 10ஆம் திகதி வழங்கப்படவேண்டிய ​முற்கொடுப்பனவு இன்னும் வழங்கப்படாமையால், நாளை (16) கொழும்பிலுள்ள பெருந்தோட்டயாக்க தலைமைக் காரியாலயத்துக்கு முன்னாள், பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்சிக் சசி,

கடந்த பல ஆண்டுகளாக, இவ்வாறு கொடுப்பனவுகள், சம்பளம், முற்பணம் என்பவை வழங்கப்படுவதில்லை என்றும் கடந்த 54 மாதங்களாக இந்நிலைக் காணப்படுவதாக தெரிவித்து, இரண்டு மாதங்களுக்கு முன்னர், இலங்கை தேயிலை உற்பத்தி நிறுவனத்திடம் இது குறித்துத் தெரிவித்த போதும், இதுவரையில் எநதவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் என்பதை, தோட்ட நிர்வாகங்களால், வங்கிகளுக்குச் செலுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .