மொஹொமட் ஆஸிக் / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனங்களுக்கு இடையல் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்குடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கண்டி மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள வேலைத்திட்டத்தின் கீழ், முல்லைதீவு மாவட்டத்தைச் சேர்ந்த 30 தமிழ் இளைஞர், யுவதிகள், கண்டி மாவட்டத்துக்கு, எதிர்வரும் 20ஆம் திகதி, நல்லுறவு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர் என, கண்டி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்டி, டெவோன் ரெஸ்ட்டில், நேற்று (12) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில், கண்டி மாவட்டத்திலிருந்து, இளைஞர், யுவதிகள், முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் சென்றனர் என்றும் அங்கு அவர்கள், தமிழ் இளைஞர்களுடைய வீடுகளில் தங்கியிருந்து, பல அனுபவங்களைப் பெற்றுக்கொண்டனர் என்றும் தெரிவித்தனர்.
அதேபோன்று, முல்லைதீவு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுடன், பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என்றும் கூறினர்.
இதன்பிரகாரம், 20ஆம் திகதி கண்டிக்கு வரும் முல்லைத்தீவு இளைஞர், யுவதிகள், ஹத்தரலியத்த, வெலிவிட எனும் கிராமத்தில் ஐந்து நாள்களுக்குத் தங்கியிருப்பர் என்றும் கண்டியிலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களைப் பார்வையிட்டு, கண்டி கலாசாரத்தின் முக்கிய அம்சங்கள் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்வார் என்று மேலும் தெரிவித்தனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago