Editorial / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கட்டுப்பொல்' என்றழைக்கப்படும் முள் தேங்காய் பயிர்ச்செய்கையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதென சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
அந்தப் பயிர்ச்செய்கையால், சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகள், சுகாதார அச்சுறுத்தல் ஆகியனவற்றை கவனத்திற் கொண்டே, மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். ஏதாவது நிறுவனங்கள், தான்தோன்றித்தனமான முறையில், முள் தேங்காய் பயிர்ச்செய்கையை முன்னெடுக்குமாயின், அதனை தடுத்து நிறுத்துவதற்கும், சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் பயிர்ச்செய்கையை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அந்தப் பயிர்ச்செய்கைக்கு மாற்று பயிரை அறிமுகப்படுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
32 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago