2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மூன்று குழந்தைகளின் தந்தை மாயம்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட புரவுன்லோ தோட்டத்தைச் 55 வயதுடைய வேலு மருதமுத்து என்பவர் புதன்கிழமை (06) அன்று காலை  வீட்டை விட்டு வெளியேறி சென்று வீடு திரும்பாத நிலையில் அவரது மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துஉள்ளார்.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸார் மற்றும் மவுஸ்ஸாகலை நீர்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மற்றும் புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வியாழக்கிழமை (07) அன்று காலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் மவுஸ்ஸாகலை நீர்தேக்கத்தின் புரவுன்லோ கரையோர பகுதியில் காணாமல் போன வேலுமருதமுத்து அணிந்திருந்த உடை பாதணி என்பவற்றை கண்டு நீர்தேக்கத்தில் தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .