Kogilavani / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில், கிராமங்களில் கடமையாற்றிய கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூவர், மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பதவி உயர்வுபெற்றுள்ளனர்.
இவர்களுக்கான நியனக் கடிதம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவால், நேற்று (1) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத் தொகுதியில் வழங்கப்பட்டது.
இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தில் இரண்டு சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் கடமையாற்றிய இரு உத்தியோகத்தர்கள் சிறுவர் பாதுகாப்பு நிலையத்தின் உதவி அதிகாரிகளாக பதவி உயர்வுபெற்றுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவால், நேற்று (1) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத் தொகுதியில் வழங்கப்பட்டது.
இதன்போது சப்ரகமுவ மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் பிரபாத் உதாகர், சப்ரகமுவ மாகாண கைத்தொழில் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் எச்.டி.சிசிர உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago