2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

Freelancer   / 2021 நவம்பர் 07 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

மேல் கொத்மலையின் நீரேந்தும் பகுதிகளில் நேற்று (06) பெய்த கடும் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று, இன்று (07) காலை திறக்கப்பட்டதாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்துக்குப் கடமை நேரப் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

மேல் கொத்மலையின் நீரேந்தும் பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் எஞ்சிய வான்கதவுகள் தானாக திறக்கப்படும் என்பதால் கொத்மலை ஓயாவின் இரு கரை ஓரங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சான் கிளாரி மற்றும் டோவன் அருவிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X