Janu / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்விலை, மெய்யன்கண்டி விக்னேஸ்வரா தமிழ் மகாவித்தியாலய பெற்றோர்கள் முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டமொன்றைப் பன்விலை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பாடசாலை மைதானத்தின் நடுப்பகுதியில் வீதி ஒன்றை அமைப்பதற்காக ஒரு சிலரால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து புதன்கிழமை (29) காலை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்காக மைதானத்தில் ஒன்றுகூடினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு பன்விலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், எதிர்வரும் முதலாம் திகதி பிரதேச செயலாளர், பொலிஸார், பாடசாலை நிர்வாகம், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மத்திய மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் விசேட சந்திப்பொன்றை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
அந்தச் சந்திப்பின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கலாம் என பொறுப்பதிகாரி தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்றனர்.
பாடசாலை மைதானத்தை கடந்து, அங்கு அமைந்துள்ள கிராம சேவகர் அலுவலகத்திற்கும் சில குடியிருப்புகளுக்கும் செல்ல வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டி, மைதானத்தின் மத்தியிலேயே பாதையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பாடசாலை நிர்வாகம், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், குறித்த பகுதி தொடர்ந்து பாதையாக பயன்படுத்தப்பட்டு வருவதோடு, அதனை நிரந்தரமான வீதியாக மாற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாடசாலை மைதானத்தை சேதப்படுத்தும் வகையில் அல்லது அதன் நடுவே பாதை அமைக்கும் நடவடிக்கைகள் எவையேனும் எடுக்கப்பட்டால், அதற்கு எதிராக தொடர்ந்து பாரிய போராட்டங்களை முன்னெடுக்க தயாராக இருப்பதாக பொதுமக்களும் பழைய மாணவர்களும் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மெய்யன்




1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026