Editorial / 2019 ஜூலை 16 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் யட்டிநுவர பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யட்டிநுவர பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான துஷித வெலகெதர என்பவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி தன்னை தாக்கியதாக தெரிவித்து துஷித வெலகெதர, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago