2026 மே 09, சனிக்கிழமை

dd

’மொட்டு உறுப்பினர்களுக்கு வலைவீச்சு’

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், ரஞ்சித் ராஜபக்‌ஷ

மொட்டுக் கட்சியிலுள்ள உறுப்பினர்களுக்கு வலைவிரிப்பதற்காக, மத்திய வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம், தற்போது வெளியில் வருவதாக, அக்கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற மஹிந்தானந்த அளுத்கமே தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமேதாஸவுக்கு ஆதரவு வழங்குகின்ற சிலர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தயார் நிலையில் உள்ளனர் என்றும் இதனை அறிந்துகொண்ட ஐ.தே.க, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மத்திய வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் தற்போதே வெளியில் வருவதாகவும் அமைச்சர் மலிக்சமரவிக்ரம, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் பின்னால் சென்று “இவ்வளவு
தொகை பணம் தருகிறேன் எமது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குங்கள்”  என்று கோரி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“அமைச்சர் மலிக் சமரவிக்ரம, குருநாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, ஐம்பது மில்லியன் ரூபாய் பணத்தை  வழங்கி, தனது பக்கம் வருமாறு கோறியிருக்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, ஐ.தே.க உடனடியாக நிறுத்தவேண்டும். மத்திய வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம், தற்போது பாரிய அளவில் செலவு செய்யபடுகிறது. தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், ஐக்கிய தேசிய கட்சி, இதற்குப் பதிலளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை, நினைவூட்டுகிறோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .