Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 ஜூன் 25 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தேசிய மொழி கொள்கையில் மலையக சமூகம் உரிமையுடன் வாழ வேண்டும் என மனித அபிவிருத்தி தாபனம் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற் திட்டத்தின் ஊடாக கொட்டக்கலையில் செயலமர்வு ஒன்றை நடத்தியது.
மொழி உரிமை மற்றும் சமூக ஒருமைப்பாடு எனும் தலைப்பில் இந்த செயலமர்வு மனித அபிவிருத்தி தாபன தலைவர் கலாநிதி பி.பி.சிவபிரகாசம் தலைமையில் ஹில்கூல் விடுதியில் இடம்பெற்றது.
கொட்டக்கலை,மற்றும் தலவாக்கலை பிரதேசங்களில் வாழும் பெருந்தோட்ட மக்கள் உள்ளிட்ட அனைத்து மலையக மக்களும் தேசிய மொழி கொள்கையில் எவ்வாறு அரச நிறுவனங்களில் உரிமைகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் இந்த செயலமர்வு பிரதேச மக்களுக்கு நன்மை படிக்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 29 ஆண்டுகளாக தேசிய மொழி உரிமை மற்றும் மனித அபிவிருத்திக்கென பல வேலைத்திட்டங்களை கண்டி,நுவரெலியா, கேகாலை,மற்றும் அம்பாறை பகுதிகளில் முன்னெடுத்து வருகின்ற மனித அபிவிருத்தி தாபனம் இதன் ஒரு நிகழ்வினை (25.06.2023) இன்றைய தினம் நடத்தியது.
இந்த செயலமர்வில் தலவாக்கலை பிரதேச செயலகத்தின் புதிய செயலாளர் சசிபிரபா பிரேமசிங்ஹ, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயலதிட்ட பிரதி பணிப்பாளர் சட்டத்தரணி எம். திருநாவுகரசு,மனித அபிவிருத்தி தாபன ஆலோசகரும் சட்டத்தரணியுமான அ.செல்வராஜ், வங்கி முகாமையாளரும்,தாபன செயலாளருமான த.சந்திரகுமார் உள்ளிட்ட சகவாழ்வு சங்க உறுப்பினர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,அதிபர்கள், ஆசிரியர்கள்,அரச சார்பற்ற நிறுவன பிரதநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆ.ரமேஸ்,நீலமேகம் பிரசாத்,எஸ்.கௌசி.செ.தி.பெருமாள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago