2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மாத்தளையில் மழை: 258 பேர் இடம்பெயர்வு

Kogilavani   / 2015 நவம்பர் 17 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்திர விராஜ் அபயசிறி

தொடர்ந்து பெய்யும் மழைக்காரணமாக மாத்தளை பிரதேசத்தில்  84 குடும்பங்களை சேர்ந்த 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , இவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்  மாத்தளை  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஷமிந்த அமரவீர தெரிவித்தார்.

தம்புளை, நாவுல, பல்லேபொல, யடவத்த பகுதியில்  ஐந்து வீடுகள்  முற்றாகவும் பத்து வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.     

மேலும், 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள்  யடிகல்பொத்த முகாமிலும் 44 குடும்பங்களை சேர்ந்தவர்கள்  புவக்பிடிய முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .